உயிரியல் ஆய்வகத்தை கைப்பற்றிய போராளிகள்; பேரழிவுக்கு வாய்ப்பு - ஐநா எச்சரிக்கை

Sudan
By Sumathi Apr 27, 2023 05:28 AM GMT
Report

சூடானில் போராளி குழு முக்கிய ஆய்வகம் ஒன்றை கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேராபத்து

சூடானில், துணை ராணுவ அதிவிரைவு படைகளுக்கும் ஆயுதப் படைகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கடும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

உயிரியல் ஆய்வகத்தை கைப்பற்றிய போராளிகள்; பேரழிவுக்கு வாய்ப்பு - ஐநா எச்சரிக்கை | Biological Lab Sudan Fighters Occupy Warning

பதற்ற நிலையே நீடித்து வருகிறது. உயிரிழப்பும் 400ஐ கடந்துள்ளது. இதற்கிடையில், அங்குள்ள வைரஸ்கள் இருக்கும் ஆய்வகங்களை போராளிக் குழுக்கள் தங்கள் வசப்படுத்தியுள்ளனர்.

ஐநா எச்சரிக்கை

இது போரை வேறு மாதிரி எடுத்துச் செல்லும் என்றும் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி நிமா சயீத் அபிட் கூறுகையில், "போராளிக் குழுக்களில் ஒரு தரப்பு, கொடூர வைரஸ்கள் இருக்கும் ஆய்வகத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

இது நமக்கு மிகப் பெரிய உயிரியல் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். இதைச் சரி செய்ய நாம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.