சூடானில் வெடிக்கும் மோதல்; 270 பேர் பலி - 3000 இந்தியர்கள் தவிப்பு!
சூடான் பயங்கர சண்டையில் உயிரிழப்பு 270 ஆக அதிகரித்துள்ளது.
ராணுவ மோதல்
சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. துணை தளபதியான முகமது ஹம்தான் டாக்லோ, ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் - புர்ஹான் உடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார். இருதரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர மோதல் வெடித்தது.

இதில், இதுவரை, 270 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,600க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். உணவு, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்தியர்கள் தவிப்பு
நாட்டில் பல இடங்களில் மின்சார வினியோகம் தடைபட்டள்ளது. தொடர்ந்து 3000 இந்தியர்கள் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய வெளியுறத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், டான் நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளியுறவுத்துறையும் சூடானில் உள்ள இந்திய தூதரகமும் இணைந்து இந்தியர்களை மீட்க முயற்சி எடுத்து வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.