த்ரிஷாவின் முன்னாள் காதலனுடன் டேட்டிங் - ஓப்பனாக ஒத்துக் கொண்ட நடிகை
நடிகை பிந்து மாதவி திரிஷாவின் முன்னாள் காதலருடன் டேட்டிங் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிந்து மாதவி
‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் பிந்து மாதவி. தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க-2 போன்ற வெற்றி படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக கலந்துக் கொண்டார். தொடர்ந்து, கடந்த சீசன் பிக் பாஸ் தெலுங்கில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், இவர் வருண் மணியனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.
டேட்டிங்
தொடர்ந்து இதுகுறித்து பேசிய பிந்து மாதவி, ருண் மணியனுடன் டேட்டிங் செய்தது உண்மைதான் என்றும் த்ரிஷாவை விட்டு அவர் பிரிந்த பிறகு தான் நான் டேட்டிங் செய்தேன் என்றும் கூறியுள்ளார்.
ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினான திரிஷாவுக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்னரே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
