நூற்றாண்டு கால பழக்கம் - நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் நாடு!

South Korea
By Sumathi Jan 10, 2024 06:47 AM GMT
Report

நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாய் இறைச்சி

தென்கொரியாவில் பிரதமர் ஹான் டக் சூ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டில் நாய்கள் இறைச்சிக்காக அதிகளவில் கொல்லப்பட்டு வந்தது. மேலும், அது நூற்றாண்டு கால பழக்கமாகவும் இருந்து வருகிறது.

ban-dog-meat

இதனைத் தொடர்ந்து, நாய் இறைச்சிக்கு தடை விதிக்க விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா தென்கொரிய நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாய், மாடு வளர்த்தால் வரி கட்ட வேண்டும் - மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

நாய், மாடு வளர்த்தால் வரி கட்ட வேண்டும் - மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

 3 ஆண்டுகள் சிறை

அதன்படி, நாய் இறைச்சி விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். உணவுக்காக நாயை கொன்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 23,000 டாலர் (ரூ.19 லட்சம்) வரை அபராதமும் விதிக்கப்படும்.

south-korea

அதனை விநியோகம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 டாலர் அபராதமும் விதிக்கப்படும். இந்தச் சட்டம் 2027-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த வேலையில் ஈடுபடுபவர்கள் வேறு வேலைக்கு மாறுவதற்காக 3 ஆண்டுகள் அவகாசம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.