லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து..எலான் மஸ்க் செய்வது தவறு -பில் கேட்ஸ் எச்சரிக்கை!
எலான் மஸ்க்-கின் செயலுக்கு பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசின் நிறுவனத்தை (USAID) மூடப்போவதாக தொழிலதிபரும் அரசின் D.O.G.E அமைப்பின் தலைவருமான எலான் மஸ்க் அறிவித்ததற்கு MICROSOFT நிறுவனர் பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று கொண்ட டொனால்ட் ட்ரம்ப் தனது ஆட்சியில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு திறன்துறையின் (DOGE) தலைவராக எலான் மஸ்க்கை ட்ரம்ப் நியமித்துள்ளார். இந்த நிலையில் எலான் மஸ்க் தலைமையிலான அரசு திறன்துறையின் (DOGE) குழு, லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான ஆலோசனையை வழங்கியிருக்கிறது.
இது குறித்து எலான் மஸ்க் தன் எக்ஸ் பக்கத்தில், ``வரி செலுத்துவோர் பணத்தை மோசடி செய்வதையும் வீணாக்குவதையும் நிறுத்துவதற்கான ஒரே வழி, பணம் செலுத்துவோரின் சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகளை நிறுத்துவதுதான்." என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு MICROSOFT நிறுவனர் பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். USAID மூலமாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு வழிவக்கும் என அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
USAID என்றால் என்ன ?
USAID நிறுவனம் சுமார் 130 நாடுகளுக்கு பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் வளர்ச்சி நிதியாகும். இது சுகாதாரம், காலநிலை மாற்றம், கல்வி, சுத்தமான நீர் மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு நிதி வழங்குகிறது .
அத்துடன் பேரிடர் நிவாரணம், வறுமை நிவாரணம் மற்றும் உதவி பெறும் நாடுகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுகிறது. USAID இன் உதவி பண உதவி முதல் அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் மற்றும் உணவு தானியங்களை வளர்ச்சிக்கு நிதி வழங்கப்படும் .