ஏழைக் குழந்தைகளை கொல்லும் எலான் மஸ்க்? பில்கேட்ஸ் குற்றச்சாட்டு
எலான் மஸ்க் செய்த செயல் ஒன்றை பில்கேட்ஸ் விமர்சித்துப் பேசியுள்ளார்.
எலான் மஸ்க் செயல்
உலகம் முழுவதும் உதவிகளை வழங்கிவரும் ஏஜென்சியான US ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மெண்டிற்கு வழங்கி வந்த உதவியை எலான் மஸ்க் நிறுத்தியுள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள மைக்ரோசாப்ட் ஃபவுண்டர் பில்கேட்ஸ்,
“இந்த உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர், இந்த உலகத்திலேயே ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளை கொல்வது என்பது நல்ல விஷயம் கிடையாது.
எலான் மஸ்க் US ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மெண்டிற்கு வழங்கி வந்த பணத்தை நிறுத்தியதன் விளைவாக தற்போது HIVயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை அவர் நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இறந்த பிறகு இந்த உலகம் என்னைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
பில்கேட்ஸ் விமர்சனம்
ஆனால், இவர் ‘பணக்காரராகவே இறந்துவிட்டார்’ என்று மட்டும் என்னை யாரும் கூறி விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். மக்களுக்கு உதவும் பொருட்டு இந்த உலகில் தீர்க்கப்பட வேண்டிய பல அவசர பிரச்சனைகள் உள்ளன.
இதன் காரணமாக நான் முன்னதாக திட்டமிட்டதைவிட இந்த சமூகத்திற்கு என்னுடைய பணத்தை இன்னும் விரைவாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அடுத்த 20 வருடங்களில் 200 பில்லியன் டாலர்களை செலவிடுவதற்கு திட்டமிட்டுள்ளேன். தாய் மற்றும் பிள்ளைகளை கொல்லக்கூடிய நோய்களை தடுப்பது,
மலேரியா மற்றும் மீசில்ஸ் உட்பட தொற்று நோய்களை நீக்குவது மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் வறுமையைப் போக்குவது ஆகிய மூன்று முக்கியமான இலக்குகள் தன்னுடைய அறக்கட்டளைக்கு” இருப்பதாக தெரிவித்துள்ளார்.