தோனி வீட்டில் இத்தனை பைக்குகளா; ஆடிப்போன வெங்கடேஷ் பிரசாத் - வைரல் வீடியோ!

MS Dhoni Viral Video
By Sumathi Jul 18, 2023 07:58 AM GMT
Report

தோனியின் பைக்குகள் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பைக் மீது ஆர்வம்

கிரிக்கெட் விளையாடுவதில் தோனி எவ்வளவு ஆர்வம் காட்டுவாரோ, அதே அளவிற்கு இருசக்கர வாகனங்கள் மீது பிரியம் கொண்டவர். உலகின் முன்னணி இரு சக்கர வாகனங்களை வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார்.

தோனி வீட்டில் இத்தனை பைக்குகளா; ஆடிப்போன வெங்கடேஷ் பிரசாத் - வைரல் வீடியோ! | Bike Collection Video Of Ms Dhoni Viral

இந்நிலையில், முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், தோனியுடன் அவரது பைக் ஷெட்டில் எடுத்துள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், சுமார் 50க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 10க்கும் அதிகமான கார்களும் நிற்கின்றன.

வைரல் வீடியோ

மேலும், குடும்பத்தினர் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான ஷெட்டை வீட்டின் அருகே அமைக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளியே ஷெட்டை அமைத்தோம்.

இந்த ஷெட் அருகில் பேட்மிண்டன் கோர்ட் அமைந்துள்ளது என தோனி கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது தோனி, விவசாயம், முதலீடுகள், விளையாட்டு அணிகள், சினிமா என்று பல துறைகளில் கால் பதித்து வருகிறார்.