கெத்தா.. மாஸா... சாலையில் பைக் ஓட்டிச் சென்ற தோனி...! வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் சாலையில் பைக் ஓட்டிச் சென்ற தோனியின் வீடியோ வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் தோனி
இந்திய கிரிக்கெட்டில் நட்சத்திர ஆட்டக்காரர், மின்னல் வேக விக்கெட் கீப்பர், கேப்டன் கூல் என தனது கேரியரில் பல பொறுப்புகளை சுமந்து எல்லாவற்றிலும் ஜொலித்து தனி முத்திரை பதித்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
இவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து 2014ம் ஆண்டிலும், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து 2019ம் ஆண்டிலும் ஓய்வு பெற்றார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை வரவழைத்தது. ஆனால், இந்திய அணியின் ஹீரோவாக திகழ்ந்த அவரின் ஆட்டத்தை தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ரசிகர்கள் பார்த்து ஆறுதல் அடைந்து வருகின்றனர்.
சாலையில் பைக் ஓட்டிய தோனி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தோனி சாலையில் பைக் ஓட்டி சென்றுக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பின் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்தனர். பின்னர், பைக்கை நிறுத்திய தோனி தன் சிரித்த முகத்துடன் ரசிகர்களிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Lucky fans ?❤️#MSDhoni pic.twitter.com/dCFa3R4nfb
— Nithish MSDian ? (@thebrainofmsd) November 4, 2022