ஆத்திரம் தீர தாக்கிய ஆசிரியர்.. சுய நினைவை இழந்த 5வயது சிறுவன்!
பிகாரில் ஆசிரியர் தாக்கியதில் 5 வயது சிறுவன் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டியூசன்
பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனோரா பகுதியில் ஜெயா கோச்சிங் சென்டர் என்ற பெயரில் டியூசன் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஷிப்ட் முறையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் டியூசன் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு 5 வயதான சிறுவன் ஒருவர் டியூசன் பயின்று வந்துள்ளான். வழக்கம்போல் இன்று டியூசன் வந்த சிறுவன் அருகில் இருந்த வேறு ஒரு மாணவருடன் படிக்காமல் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியர் தாக்குதல்
இதனை தொடர்ந்து மாணவர்களை கண்கானித்து வந்த டியூசன் மைய ஆசிரியர் சோட்டு என்பவர் அந்த சிறுவனை கையில் இருந்த தடியால் அடித்துள்ளார்.
ஆத்திரம் தீர அடித்த சோட்டுவின் தடி உடைந்த நிலையில் அவர் அந்த சிறுவனை கையால் தாக்க ஆரம்பித்துள்ளார். இதில் அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே சுயநினைவு இழந்து மயங்கி விழுந்துள்ளார்.
வீடியோ
இதனை அடுத்து சக மாணவர்கள் கத்தி கூச்சலிடவே அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததுடன்,
ஆசிரியர் சோட்டுவையும் பலமாக தாக்கி போலீஸில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
கணவனை தோளில் சுமந்து ஊர் முழுக்க வலம்.. தகாத உறவால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!