10ம் வகுப்பு மாணவி பாலியல் புகார் - டியூசன் ஆசிரியருக்கு 18 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி!
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். இவருடைய டியூசன் சென்டரில் 10ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை ரஞ்சித் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இது குறித்து மாணவி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை சொல்லி அழுதுள்ளார். உடனே, பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இது தொடர்பாக போலீசார் ரஞ்சித் மீது போக்சோ, பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.
ரஞ்சித்துக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் பலாத்காரம் பிரிவின்கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ஓராண்டு சிறை தண்டனை என்றும் ஆக மொத்தம் 11 ஆண்டுகள் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.