விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம்; படித்துக்கூட பார்க்காமல் மார்க் போட்ட ஆசிரியர் - viral video!

Viral Video India Bihar Social Media
By Swetha May 29, 2024 06:10 AM GMT
Report

ஆசிரியர் ஒருவர் விடைத்தாளை அலட்சியமாக திருத்தும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அலட்சிய ஆசிரியர்

பீகாரில் உள்ள பாடலிபுத்ரா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் முடிந்து விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம்; படித்துக்கூட பார்க்காமல் மார்க் போட்ட ஆசிரியர் - viral video! | Bihar Teacher Grading Answer Sheets Video Viral

அப்போது விடைத்தாள்களை திருத்து பணியில் ஈடுபட்டு இருந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்கள் எழுதிய விடைகளை முழுவதும் படித்து பார்க்காமலேயே தனது பேனாவினால் சரிபார்க்கிறார்.சில நொடிகளில் விடைத்தாள் பக்கங்களை புரட்டி சரிபார்த்தவாறு மதிப்பெண்களை வழங்குகிறார்.

விடைத்தாளில் மாணவர்கள் எழுதிய ஜெய் ஸ்ரீராம் - மதிப்பெண்களை வாரி வழங்கிய ஆசிரியர்!

விடைத்தாளில் மாணவர்கள் எழுதிய ஜெய் ஸ்ரீராம் - மதிப்பெண்களை வாரி வழங்கிய ஆசிரியர்!

விடைத்தாள் திருத்தம்

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலாகியுள்ளது. இந்த நிலையில், 'பேராசிரியை மதிப்பெண் வழங்கும் விடைத்தாள்களுக்கு உரிய மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்' என கருத்துகளை தெரிவித்து வேகமாக பரப்பி வருகிறார்கள்.

விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம்; படித்துக்கூட பார்க்காமல் மார்க் போட்ட ஆசிரியர் - viral video! | Bihar Teacher Grading Answer Sheets Video Viral

இதை தொடர்ந்து தனது பணியில் அலட்சியமாக செயல்பட்டுள்ள குறிப்பிட்ட பேராசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாடலிபுத்ரா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.