கோவிலில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் - 7 பேர் பலியான கொடூரம்!
கோவிலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கூட்ட நெரிசல்
பீகார், ஜெகனாபாத்தில் பாபா சித்தேஷ்வர்நாத் கோவில் உள்ளது. இங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து, நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக ஜெகனாபாத் மாவட்ட ஆட்சியர் அலங்கிரிதா பாண்டே தெரிவித்துள்ளார்.
7 பேர் பலி
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெகனாபாத் மாவட்டத்தின் மக்தும்பூரில் உள்ள பாபா சித்நாத் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது ஏழு பேர் இறந்தனர்.
ஒன்பது பேர் காயமடைந்தனர். நாங்கள் எல்லாவற்றையும் கண்காணித்து வருகிறோம். இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.