பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்
கூட்டணி ஆட்சி அமைந்தது முதலே பாஜகவிற்கு பிரச்சனை தான் பேசிவருகிறார்கள் எதிர்க்கட்சிகள்.
கூட்டணி ஆட்சி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெறாத பாஜக, கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கூட்டணியில் முக்கிய கட்சிகளாக இருப்பது
ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும். இவர்களின் கூட்டணியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளதால், இனி இவ்விரு கட்சிகளால் பாஜகவிற்கு சிக்கல் தான் பேசிவருகிறார்கள் எதிர்க்கட்சிகள்.
தங்களின் ஆதரவு தேவைப்படுவதால், தங்களுக்கு தேவையானதை சற்று அழுத்தமாக கேட்டு பெறுவார்கள் இக்கட்சிகள் என பல கருத்துக்கள் வெளிப்பட்டன.
அந்தஸ்து இல்லை
நீண்ட காலமாகவே சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டுமென பீகார் மற்றும் ஆந்திர மாநில கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள். நடப்பு நிதியாண்டில் இது தொடர்பாக அறிவிப்பு இருக்குமா? என்ற கேள்வி இருக்கிறது.
நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் ஐக்கிய ஜனதா தளக்கட்சி தனது கோரிக்கையை வலியுறுத்தியது.
இந்த சூழலில், மத்திய அமைச்சர்கள் குழு அறிக்கை 2012 படி பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவித்துள்ளது.