துடிதுடித்து உயிரிழந்த ரயில்வே ஊழியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
ரயில் இன்ஜின் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரயில்வே ஊழியர்
பீகார் மாநிலத்திலிருந்து பரவுனி ரயில் நிலையத்தில் லக்னோ–பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் லக்னோவிலிருந்து பரவுனி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது ரயில் பெட்டியையும், இன்ஜினையும் இணைக்கும் கப்ளிங்கை பிரிக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் ஈடுபட்டிருந்தார்.
அந்த நேரத்தில் லோகோ பைலட் இன்ஜினை முன்னோக்கி செலுத்தவதற்கு மாறாகத் தவறுதலாகப் பின்னோக்கி திருப்பியுள்ளார். இதனால்கப்ளிங்கை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊழியர் ராவின் உடல் கப்ளிங் இரண்டிற்கும் இடையில் சிக்கியுள்ளார்.
இதனால் வலிதாங்காமல் கூச்சலிட்டுள்ளார். இதனைக் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே தவறு செய்த லோகோ பைலட் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரமாக உடல் நசுங்கி உயிரிழந்த அமர் குமார் ராவ் நிலையிலிருந்துள்ளார்.
உயிரிழந்த சம்பவம்
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் .
முதற்கட்ட விசாரணையில் முதற்கட்ட விசாரணையில் ரயில்வே ஊழியர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு குறைபாடே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.