தலையில் ஷூ கவரை அணிந்த அமைச்சர்..வைரலாகும் புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்!
தலையில் ஷூ கவரை அணிந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சரின் புகைப்படம் வைரலாகியுள்ளது.
ஷூ கவர்
பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே பெகுசராய்யில் உள்ள சதார் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த சுகாதார பணியாளர்கள் அமைச்சருக்கு சர்ஜிக்கல் தொப்பியை கொடுப்பதற்கு பதிலாக ஷூ கவரை கொடுத்துள்ளனர்.
அமைச்சரும் அதனை கவனிக்காமல் ஷூ கவரை தலையில் அணிந்துள்ளார். அவர் ஷூ கவரை அணிந்திருந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
அமைச்சர்
இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள பதிவில், கீழ்கண்ட படத்தில் இருப்பவர் பீகாரின் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே. சர்ஜிக்கல் தொப்பிக்கு பதிலாக ஷூ கவரை சுகாதார ஊழியர்கள் அவருக்கு கொடுத்துள்ளனர்.
அமைச்சரும் எதுவும் தெரியாமல் ஷூ கவரை அணிந்துள்ளார். இப்போது நீங்கள் பீகாரின் சுகாதார அமைப்பை கற்பனை செய்து பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.