மேடையில் மணப்பெண்ணின் தங்கையை கரம் பிடித்த மாப்பிள்ளை - அம்பலமான காதல் சம்பவம்!
மாப்பிள்ளை மணப்பெண்ணின் தங்கையை கரம்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அக்காவுடன் திருமணம்
பீகார், சாப்ரா நகரைச் சேர்ந்த ஜக்மோகன் - மஹதோவின் மகன் ராஜேஷ் குமார். இவருக்கு மஞ்சியில் உள்ள பபௌலி கிராமத்தைச் சேர்ந்த ரிங்கு குமாரி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்தம் நடந்துள்ளது. தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று ஊர்வலம் பபௌலி கிராமத்தை அடைந்தது.
இந்நிலையில், இரவு 11 மணியளவில் மணப்பெண்ணின் தங்கை புதுல் குமாரி, ரகசியமாக கூரையின் மீது ஏறி மாப்பிள்ளை ராஜேஷை அழைத்து நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டியுள்ளார்.
தங்கையுடன் காதல்
உடனே இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறியதில் கைகலப்பு ஆகியுள்ளது. தொடர்ந்து தகவலறிந்த போலீஸார் உள்ளூர் தலைவர் மற்றும் மணமகன் ராஜேஷிடம் பேசினர். சாப்ராவில் உள்ள கல்லூரியில் இடைநிலைத் தேர்வை முடித்த பெண்,
அடிக்கடி ஊருக்குச் சென்று அங்கு ராஜேஷை சந்தித்து வந்துள்ளார். காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு ரிங்குவுடன் ராஜேஷுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்பின், மணமகளும் தனது தங்கை புதுல் குமாரியுடன் மணமகன் ராஜேஷ்குமார் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். அதனையடுத்து இருவருக்கும் திருமணம் ஒருவழியாக நடைபெற்றுள்ளது.