காதலனுடன் தனிமை; ஊருக்கே பவர் கட் செய்த பெண் - பிடித்து கல்யாணம் செய்துவைத்த மக்கள்!
காதலனை சந்திக்க இளம்பெண் ஊருக்கே பவர் கட் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தினமும் சந்திப்பு
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரீத்தி என்ற இளம்பெண். இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் இரவில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனால் கிராமத்தின் மின் இணைப்பை துண்டித்து விட்டு சந்தித்துள்ளனர். இந்நிலையில், தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதை கிராமத்தினர் கவனித்துள்ளனர்.
பவர் கட்
தொடர்ந்து, கிராமத்தினர் கிராமத்தை சுற்றி வந்த போது இளம் பெண்ணும் அவரது காதலரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். உடனே அவர்களை சுற்றி வளைத்து விசாரித்ததில் இருவரும் காதலிப்பதால்
இவ்வாறு மின் இணைப்பை துண்டித்து சந்தித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர்.