பெண்களுக்கு தலா ரூ.10,000; யாருக்கெல்லாம்? பிரதமர் மோடி அறிவிப்பு!

Narendra Modi Bihar Money
By Sumathi Sep 25, 2025 01:41 PM GMT
Report

பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

10 ஆயிரம் ரூபாய் திட்டம்

பிகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

பெண்களுக்கு தலா ரூ.10,000; யாருக்கெல்லாம்? பிரதமர் மோடி அறிவிப்பு! | Bihar Employment Scheme 75 Lakh Women 10 Thousand

இந்நிலையில், முதலமைச்சரின் மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 75 லட்சம் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு, முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி 2.0; ஐஸ்கிரீம் முதல் ஆயில் வரை - விலை குறைவு பட்டியல் இதோ..

ஜிஎஸ்டி 2.0; ஐஸ்கிரீம் முதல் ஆயில் வரை - விலை குறைவு பட்டியல் இதோ..

தொடங்கி வைக்கும் மோடி 

அதன்படி, இதுவரை ஒரு கோடியே 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக அம்மாநில ஊரக வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது. இதில், தகுதியான 75 லட்சம் பெண்களை தேர்வு செய்து, முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

pm modi

6 மாத ஆய்வுக்கு பின், பணம் பெற்றவர்களின் தொழில் திறனை வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். மேலும், முதற்கட்டமாக வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாயை திருப்பித் தரத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாளை தொடங்கி வைக்கிறார்.