எந்தக் கட்சிக்கு எவ்வளவு சதவீத வாக்கு? பரபரப்பில் பீகார்!
வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
வாக்குப்பதிவு
பிகார் மாநிலத்தில் உள்ள மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், கடந்த 6ஆம் தேதி 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கும், 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு 64.66% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
கருத்துக்கணிப்பு
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளன.பாஜக, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், 243 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 122 இடங்கள் தேவை. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி : 133 – 159 மகாகத்பந்தன் கூட்டணி : 75 - 101 ஜன் சுராஜ் கட்சி : 0 – 5 மற்றவை : 2 - 8 இதில் என்.டி.ஏ. கூட்டணி 46.2%, மகாகத்பந்தன் 37.9%, ஜன் சுராஜ் 9.7%, மற்றவை 6.2% வாக்குகள் பெற வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.