80 பட்டியலின மக்களின் வீடுகளுக்கு தீ வைப்பு - அரங்கேறிய கொடூரம்!
80 பட்டியலின மக்களின் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
வீடுகளுக்கு தீ
பீகார், மாஞ்சி தோலாவிய கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அந்த கிராமத்தில் உள்ள 80 வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உடனே அனைவரும் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். தொடர்ந்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் போராடிப் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இருதரப்பினர் மோதல்
இதற்கிடையில் 21 வீடுகள் முழுவதும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 15 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் முதற்கட்ட விசாரணையில் இரு தரப்பினருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
SHOCKING VISUALS ?
— Ankit Mayank (@mr_mayank) September 18, 2024
This is absolutely heartbreaking ?
An entire village of Dalits was set on fire in NDA ruled Bihar’s Nawada
This is beyond inhuman, this is monstrous. This is JUNGLERAJ ?? pic.twitter.com/7tubMugW47
இதனையடுத்து முதல்வர் நிதிஷ்குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நேரில் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சட்ட ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.