பிக்பாஸ் தமிழ் சீசன் 8; முக்கிய புள்ளி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 குழுவின் முக்கிய நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிக்பாஸ் தமிழ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
கடந்த ஏழு சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் ஒரு சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து விலகிய நிலையில் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்கொலை
இந்த நிலையில் பிக்பாஸ்8 சீசனில் அசோசியேட் இயக்குநராகப் பணிபுரிந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை புளியந்தோப்பு வ.உ.சி நகர் 1-வது தெருவில் உள்ள தனது வீட்டில் நேற்று(02.12.2024) மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து புளியந்தோப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிக்பாஸ் குழுவின் முக்கிய நபராக இருந்த ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பிக்பாஸ் குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.