ஒரு போன்காலில் பறிபோன 17 லட்சம் - கதறி அழுத பிக்பாஸ் சௌந்தர்யா
ஸ்கேம் மூலம் பணத்தை இழந்துள்ளதாக பிக்பாஸ் சௌந்தர்யா கதறி அழுதுள்ளார்.
பண மோசடி
உலகம் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி, போன்கால் மோசடி என பலவகையான மோசடிகள் தினமும் அரங்கேறி வருகிறது.
இந்த வகையான மோசடிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் நாளுக்கு நாள் சைபர் மோசடி புகார்கள் அதிகரித்து கொண்டேதான் உள்ளது.
பிக்பாஸ் சௌந்தர்யா
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் சௌந்தர்யா ஸ்பேம் கால் மூலம் பணம் இழந்ததை பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு போன்கால் மூலம், 8 ஆண்டுகளாக தான் சம்பாதித்து வைத்திருந்த ரூ17 லட்சத்தை இழந்ததாக கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி இது குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சௌந்தர்யாவை யாரும் ஸ்கேம் பண்ணவில்லை. சௌந்தர்யாவே ஒரு ஸ்கேம் தான். தற்போது அவரது பொய்யான முகம் அம்பலமாகி விட்டது. 17 லட்சத்தை இழந்துவிட்டு யாராவது போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்காமல் இருப்பார்களா? எதையோ மறைகிறார்" என கூறி இருந்தார்.
She din't get scammed.. She is the SCAM!!!
— Sanam Shetty (@ungalsanam) November 8, 2024
Voluntarily transferred 17 Lakhs to blackmailer! What was she trying to hide?? No police complaint!?
Now I'm happy they din't stop her sob story!
She keeps on insulting viewers' intelligence! #Soundarya #Exposed #Again… https://t.co/MhYl4LYI8T
சனம் ஷெட்டியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஸ்கேன் கால் மூலம் பணத்தை இழந்தது தொடர்பாக அளித்த புகாரின் எஃப்ஐஆர் காப்பியை சவுந்தர்யாவின் டீம் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.