இந்த ஆளு கூடலாம் எப்படி குடும்பம் பண்றது; ரச்சிதா திரும்ப வந்துராத..தினேஷை விமர்சித்த பிரபலம்!
தினேஷ் குறித்து விசித்ரா கடுமையாக விமர்சித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் 7
விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்து இருக்கிறது. தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் டைட்டில் வின்னர் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதில், கடந்த சில வாரங்களாகவே விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தினேஷ் குறித்து பேசிய விசித்ரா இது எல்லாம் இருந்தென்ன பிரயோஜனம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்.
விசித்ரா விமர்சனம்
இப்படிப்பட்ட ஆளுடன் எப்படி குடும்பம் நடத்துவார்கள், விட்டுட்டு ஓட வேண்டியது தான். ஒரு மூன்று மாதம் இவர்களுடன் குடித்தனம் பண்ண முடியவில்லை. இவருடன் எல்லாம் எப்படி ஒருவர் குடித்தனம் நடத்துவார், திரும்பி கிரும்பி வந்திடாதம்மா தாயே, ஒழுங்கா வாழ்க்கையை நடத்து.
இவனுடயெல்லாம் வாழ்வதற்கு நீ தனியாகவே இருந்து விடலாம்.
இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் பலரும் விசித்ராவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னதாக, மாயா பூர்ணிமா கூட ரஷிதாவின் விஷயத்தை இழுத்து ஏதாவது தினேஷை செய்யலாம் என்று திட்டம் தீட்டியது பெரும் விவாதத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.