உனக்கு இவங்கதான் கரெக்ட் - தொடர் திருமண விஷயத்தில் வனிதாவுக்கு மகள்கள் அட்வைஸ்

Tamil Cinema Bigg Boss Vanitha Vijaykumar
By Sumathi 2 வாரங்கள் முன்
Report

திருமண விஷயத்தில் வனிதாவின் மகள்கள் நச் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளனர்.

நடிகை வனிதா 

நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் திகழ்ந்து வருகிறார். 2 மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

உனக்கு இவங்கதான் கரெக்ட் - தொடர் திருமண விஷயத்தில் வனிதாவுக்கு மகள்கள் அட்வைஸ் | Bigg Boss Vanitha Daughters Marriage Advice

இதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துகொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அது விவாகரத்தில் முடிந்தது. இதனிடையே நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய அவர், 2கே காதல், காத்து, அநீதி, அந்தகன், ரஜினி, பிக்கப் டிராப் என பல படங்களில் நடித்து வருகிறார்.

மகள்கள் அட்வைஸ்

இந்நிலையில், வனிதா தனது மகளுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்து இருந்தார். அப்போது அப்போது வனிதாவின் மகளிடம் நீங்கள் எப்போதாவது அம்மாவிற்கு அட்வைஸ் கொடுத்து அதைகேட்டு இருக்கிறார்களா ? அட்வைஸ் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு தன் மகளுக்கு முன் பதில் அளித்த வனிதா ‘ தினமும் இதுதான் நடக்கிறது.

உனக்கு இவங்கதான் கரெக்ட் - தொடர் திருமண விஷயத்தில் வனிதாவுக்கு மகள்கள் அட்வைஸ் | Bigg Boss Vanitha Daughters Marriage Advice

என் இரண்டு மகள்களும் சேர்ந்து ஒரு காலத்தில் காமெடியான அட்வைஸ் ஒன்றை செய்தார்கள் ‘பேசாமல் நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள், பெஸ்ட்டு, இந்த ஆம்பளைங்க எல்லாம் வேஸ்ட்’ என்று சொன்னதாக கூறியுள்ளார்.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.