நடிகை வனிதா கர்ப்பமா? - தீயாய் பரவும் புகைப்படம் வைரல் - ஷாக்கான ரசிகர்கள்

Vanitha Vijaykumar Viral Photos
By Nandhini Jun 27, 2022 01:09 PM GMT
Report

நடிகை வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் திகழ்ந்து வருகிறார்.

2 மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துகொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அது விவாகரத்தில் முடிந்தது.

vanitha

யூடியூப் சேனல்

இதனிடையே நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய அவர், 2கே காதல், காத்து, அநீதி, அந்தகன், ரஜினி, பிக்கப் டிராப் என பல படங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் வனிதா கடந்தாண்டு அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை தொடங்கியிருந்தார். தற்போது ஃபேஷன் டிசைனராகவும் வனிதா அவதாரம் எடுத்துள்ளார்.

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தின் போஸ்ட்ர் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த போஸ்டரில் நடிகை வனிதா கர்ப்பமாக காட்சி அளிக்கிறார். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.