Bigg Boss வீட்டில் நடந்த டபுள் எவிக்சன்- 2 போட்டியாளர்கள் யார்?வெளியான தகவல்!
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்சனில் வெளியேற 2 போட்டியாளர்கள் குறித்து பார்க்கலாம்.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
18 போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கப்போகிறோம் என்று அதிரடியாக 6 வைல்ட் கார்ட் என்ட்ரியை களமிறக்கினர். ஆனால் அப்போதும் ஆட்டத்தில் எந்த ஒரு சுவாரஸ்யமும் நடக்க வில்லை.
இந்த வாரம் டெவில் Vs ஏஞ்சல் என்று சேலஞ்சிங்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் எவ்வளவு சுவாரஸ்யம் குறைவாக விளையாட முடியுமோ அவ்வளவு சுவாரஸ்யம் குறைவாக விளையாடி ரசிகர்களைப் போட்டியாளர்கள் கடுப்பேற்றினர்.
டபுள் எவிக்சன்
நேற்று நடந்த எபிசோடில் விஜய் சேதுபதி ஹவுஸ் மேட்ஸை கோபத்துடன் ரோஸ்ட் செய்தார். அதன்பிறகு இந்த வாரம் டபுள் எவிக்சனில் 2 போட்டியாளர்கள் வெளியேற உள்ளதாக விஜய் சேதுபதி கூறவே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
தற்போது யார் அந்த 2 போட்டியாளர்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தி வெளியேற்றப்பட்டுள்ளனர்.