பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை? போராட்டம் அறிவிப்பு!

Tamil nadu Bigg boss 9 tamil
By Sumathi Nov 06, 2025 05:37 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனு அளித்துள்ளனர்.

பிக்பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தனியார் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

bigg boss tamil

இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பிக்பாஸ் ஒன்பதாவது சீசன் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் தமிழ்ச் சமூக அமைப்பை அறத்தோடு காத்து வருகின்ற முதன்மை கூறு குடும்ப அமைப்பு,

இந்த குடும்ப அமைப்பை சிதைக்கும் விதமாகவும் வளர்கிற இளம் தலைமுறை பிள்ளைகளின் நெஞ்சில் நஞ்சை பாய்ச்சுவது போல் ஆபாசம், வன்முறை, குரோதம், பொய், துரோகம், தனிமனித மோதல்கள், போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை உருவாக்கி வளர்த்து தமிழ் சமூகச் சீரழிவை விஜய் தொகைக்காட்சி ஒளிபரப்பும்

தவெகவுடன் புதிய கூட்டணியில் செங்கோட்டையன் - எடப்பாடிக்கு ஷாக்!

தவெகவுடன் புதிய கூட்டணியில் செங்கோட்டையன் - எடப்பாடிக்கு ஷாக்!

போராட்டம் அறிவிப்பு

"பிக்பாஸ்" நிகழ்ச்சி செய்து வருகிறது எனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் 09.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4 மணி அளவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு.வேல்முருகனன்.MLA அவர்கள் தலைமையில்

velmurugan

எங்கள் கட்சியின் மகளிர் அணியினர் சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குந்தம்பாக்கத்தில் இருக்கும் EVP படப்பிடிப்பு வளாகத்தில் அமைந்திருக்கும் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தாயரிக்கும் அரங்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியும், மேடை ஒலி பெருக்கிகள், கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள், அமைத்துக் கொள்வதற்கான அனுமதியும் தகுந்த பாதுகாப்பும் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.