பிக் பாஸ் தமிழ் 8.. நிகழ்ச்சியில் முக்கிய நபர் தற்கொலை - கடித்ததில் அதிர்ச்சி தகவல்!
பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியின் முக்கிய நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
பிக் பாஸ்
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 2 மாதங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், சீசன் 8 நிகழ்ச்சியில் இணை இயக்குனராக இருந்த ஸ்ரீதரன் தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவருடைய இறப்பிற்கு முன்பு அவர் எழுதிய டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் விசாரம் கல்லூரியில் விஸ்காம் பட்டப்படிப்பு முடித்து விஜய் டிவியில் பிக் பாஸ் அசோசியேட் டைரக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளியே சென்று வீட்டுக்கு திரும்பிய அவரது பெற்றோர் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காவல் நிலையத்தில் இது பற்றி தகவல் தெரிவித்து இருக்கின்றனர். அங்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீதரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ச்சி தகவல்
இதைனிடயே ஸ்ரீதரன் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றி இருக்கின்றனர். அதில் ஸ்ரீதரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசோசியேஷன் டைரக்டராக வேலை பார்த்து வந்த நிலையில் இந்த துறையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று எழுதப்பட்டிருந்தது.
மேலும் தன்னுடைய இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும் கடிதத்தில் எழுதி இருந்தார். அதுபோல ஸ்ரீதரனுக்கு திருமண வரன் அமையாமல் இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பிடித்தமான துறையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்ததும்,
தான் பிறருக்கு பாரமாக இருப்பதாகவும் அவர் நினைத்துக் கொண்டு இந்த விபரீத முடிவு எடுத்ததாக கடிதத்தில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.