பிக்பாஸ் வீட்டில் என்னப்பா நடக்குது? தலைமுடியை பிய்த்துக் கொண்டு கதறிய அன்ஷிதா!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரே நாளில் 6 ப்ரோமோ விடப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ்
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 2 மாதங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வழக்கமாக ஒரு நாளைக்கு 3 ப்ரோமோக்கள் மட்டும் தான் விடப்படும்.
இந்த வாரம் போட்டியாளர்களைத் தேவதைகள் மற்றும் பேய்களாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் ஃப்ரி பாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தேவதைகளிடம் உள்ள ஹார்ட்டை யார் அதிகமாகப் பெறுகிறார்களோ அவர்களதுஃப்ரி பாஸ் வழங்கப்படும்.
இதில் பேய்களாக இருக்கும் அணியில் உள்ள போட்டியாளர்களுக்குள் பலருக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரே நாளில் 6 ப்ரோமோ விடப்பட்டுள்ளது.குறிப்பாகத் தேவதையாக இருக்கும் அன்ஷிதா வாயில் பேய்யாக இருக்கும் சாச்சனா உணவை ஊட்டி விட்டுள்ளார்.
சீசன் 8
அதில் கீழே சிந்திய உணவைத் தரையிலிருந்து எடுத்து ஊட்டி விட்டுள்ளார். இதனால் கோபமடைந்த, அன்ஷிதா, சத்தமாக கூச்சலிட்டு சாச்சனாவை நீ குட்டிச் சாத்தான் எனக் கூறினார். தேவதைகள் கத்தக் கூடாது என பேய்யாக உள்ள தீபக் கூற,
உடனே அன்ஷிதாவோ, எந்தத் தேங்கானாலும் சரி, எனக்கு கோபம் வருது எனக் கூறி தனது தலைமுடியைத் தானே பிய்த்துக் கொண்டார். இந்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி பிக்பாஸ் வீட்டில் என்னப்பா நடக்குது? ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.