எனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை; ஏமாத்துறாங்கனு கூட தெரியல - பிக்பாஸில் கண் கலங்கிய சௌந்தர்யா
அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினையை எதிர்கொண்டதாக சௌந்தர்யா பிக்பாஸில் கண் கலங்கியுள்ளார்.
சௌந்தர்யா நஞ்சுண்டன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் சௌந்தர்யா நஞ்சுண்டன்(soundariya nanjundan).
இவர் ஏற்கனவே தர்பார், திரவுபதி, ஆதித்யா வர்மா, 90ML ஆகிய படங்களிலும், 'வேற மாறி ஆபிஸ்’ என்னும் வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
அட்ஜஸ்ட்மெண்ட்
இந்நிலையில், நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது தான் எதிர்கொண்ட அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து சௌந்தர்யா பேசி இருக்கிறார்.
இதில் பேசிய அவர், "ஒரு திரைப்பட வாய்ப்புக்காக ஆடிஷனுக்கு சென்ற போது அங்கிருந்த நபர், ஹீரோ போல் நடிக்கிறேன் என்று தன்னிடம் தவறான முறையில் தொட்டு எல்லை மீறினார்.
நான் சீன் என நினைத்துதான் பண்ணினேன். அப்போது கூட எனக்கு அவங்க என்னை ஏமாத்துறாங்கனு எனக்கு தெரியல. அந்த நிகழ்வை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை" என கண்ணீருடன் கூறினார்.