Friday, Jul 4, 2025

போனில் அந்த போட்டோவை பார்த்த காதலர் நடுரோட்டில் அறைந்தார் - பிக்பாஸ் சௌந்தர்யாவுக்கு நேர்ந்த கொடுமை

Bigg Boss Tamil Actress Bigg Boss Tamil 8 Soundariya Nanjundan
By Karthikraja 9 months ago
Report

 காதலரிடம் நடு ரோட்டில் அறை வாங்கியது குறித்து பிக்பாஸ் சௌந்தர்யா பேசியுள்ளார்.

சௌந்தர்யா நஞ்சுண்டன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் சௌந்தர்யா நஞ்சுண்டன்(soundariya nanjundan). இவர் ஏற்கனவே தர்பார், திரவுபதி, ஆதித்யா வர்மா, 90ML ஆகிய படங்களில் நடித்துள்ளர்.

bigg boss soundariya nanjundan

மேலும், வேற மாறி ஆபிஸ்’ எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தனது கடந்த கால காதலை பற்றி பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பேசியுள்ளார். பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் போதே காதலிக்க ஆரம்பித்துவிட்டாராம். கல்லூரி வரை இருவரும் காதலித்து வந்துள்ளனர்.  

ஹிந்தி பிக்பாஸில் முதல் முறையாக தமிழ் நடிகை - இவர் பிரபல நடிகரின் பேத்தி கூடவாம்...

ஹிந்தி பிக்பாஸில் முதல் முறையாக தமிழ் நடிகை - இவர் பிரபல நடிகரின் பேத்தி கூடவாம்...

அறைந்த காதலர்

கல்லூரி படித்து வந்த காலத்தில் சௌந்தர்யா மாடலிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் அது அவருடைய காதலருக்கு பிடிக்கததால், காதலருக்கு தெரியாமல் மாடலிங் போட்டோஷூட் புகைப்படங்களை போனில் ஹைட் பண்ணி வைத்துள்ளார். 

சௌந்தர்யா நஞ்சுண்டன்

காதலர் ஒரு முறை அந்த புகைப்படங்களை பார்த்துவிட்டதால், நடு ரோட்டில் சௌந்தர்யாவை அடித்தாராம். அதுமட்டுமின்றி ஒரு முறை சாஸ் பாட்டிலை வைத்து தலையில் அடித்தாராம். பலமுறை தன்னை அவர் அடித்துள்ளதாக கூறிய சௌந்தர்யா, தன்னுடைய கேரியர் முக்கியம் என முடிவு செய்து இருவரும் பிரிந்துவிட்டோம் கூறினார்.