உண்மையா இருந்தாங்களானு அவங்களுக்குத்தான் தெரியும்; நம்பமுடியல - மணி குறித்து ரவீனா?
பிக்பாஸ் குறித்து ரவீனா பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
ரவீனா
சின்னத்திரை மூலம் பிரபலமானவர் ரவீனா. நடனத்தின் மூலம் பெரிதாக அறியப்பட்டவர். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அங்கு சக போட்டியாளர் மணியுடன் கிசு கிசுக்கப்பட்டார்.
தொடர்ந்து ரவீனா பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சிக்கு இன்ஸ்டா லைவில் பேசுகையில், “உண்மையில் ஒரு கட்டத்தில் எல்லோரும் அளவுக்கு அதிகமாக உண்மையாக இருந்தார்கள். அதை நம்பவே முடியாமல் இருந்தது.
குக் வித் கோமாளி?
அவரவர் மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும். கேமராவிற்காக அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை நிச்சயமாக செய்திருப்பார்கள். அதனால் என்னால் அதை சரிவர சொல்ல முடியவில்லை. இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக நினைத்ததை ஜோவிக்காதான் காரணம் என்னவென்றால் ஆரம்பத்தில் அவர் அப்படித்தான் இருந்தார்.
எனக்கு விஷ்ணு, கூல் சுரேஷ் ஆகியோரை மிகவும் பிடிக்கும். மாயா அக்காவின் திறமையை நான் மிகவும் மதிக்கிறேன். பூர்ணிமா எப்படியானவர் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை?
நான் ஜோடி நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கிறேன். அதனால் குக் வித் கோமாளியின் சீசன் 5 -ல் நான் கலந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன். என்னை கூப்பிடவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.