பிக்பாஸ் 'பிரதீப் ஆண்டனிக்கு' திருமண நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா?

Tamil Cinema Bigg Boss Tamil Actors Tamil Actress Pradeep Anthony
By Jiyath Jun 17, 2024 10:05 AM GMT
Report

நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. 

பிரதீப் ஆண்டனி

'அருவி' என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ஆண்டனி. தொடர்ந்து 'வாழ்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இதனையடுத்து தனது நண்பர் நடிகர் கவினின் 'டாடா' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ்

மேலும், பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். ஆனால், சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி,

20 வயசுல நடந்துச்சு.. அத நெனச்சு இப்பவும் வருத்தப்படுவேன் - மனம் திறந்த ரேவதி!

20 வயசுல நடந்துச்சு.. அத நெனச்சு இப்பவும் வருத்தப்படுவேன் - மனம் திறந்த ரேவதி!

நிச்சயதார்த்தம் 

அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் அப்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. பலரும் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர். 

பிக்பாஸ்

இந்நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக பிரதீப் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது நீண்டநாள் காதலியை அவர் விரைவில் கரம்பிடிக்க உள்ளார். இந்த ஜோடிக்கு தற்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.