அந்த படத்தின்போது 'இவனுக்கெல்லாம் எதுக்கு சாப்பாடு போடுற? என்று கேட்டார் - BiggBoss பிரதீப் வேதனை!
பிக்பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி தனது முதல் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
பிரதீப் ஆன்டனி
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் பிரதீப் ஆண்டனி போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இவர் 'அருவி' என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.

தொடர்ந்து 'வாழ்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இதனையடுத்து தனது நண்பர் நடிகர் கவினின் டாடா என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அண்மையில் பிரதீப் ஆண்டனி பிக்பாஸிலிருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது அவர் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கசப்பான அனுபவம்
இந்நிலையில் தனது முதல் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து, பிக்பாஸில் பிரதீப் ஆண்டனி பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது "என்னுடைய முதல் படத்தில் நடிக்கும்போது எனக்கு பசி வந்ததால் நான் சாப்பிட சென்றேன்.

ப்ரொடக்ஷனில் சாப்பாடு போடுபவர் என்னை பார்த்தவுடன் "வாங்க சார்" என்று அழைத்தார். நான் அந்த படத்தில் ஹீரோவெல்லாம் கிடையாது, ஆனால் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளாலாம். அந்த சாப்பாடு போடுபவரை பொறுத்தவரையில் நான் படத்தின் ஹீரோ.
அவர் எனக்கு சாப்பாடு வைக்கும்போது, திடீரென ப்ரொடக்ஷன் மனேஜர் "டேய்..இவனுக்கெல்லாம் எதுக்குடா.. சாப்பாடு போடுற..? என்று சொன்னார். அன்னையின் இருந்து அந்த செட்டில் நான் சாப்பிடவே இல்லை" என்று பிரதீப் ஆண்டனி பேசியுள்ளார்.     
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    