பிக் பாஸ் அருண் என்னோட கணவர்; யார் இந்த சுபத்ரா? அப்போ அர்ச்சனாவுடன் 2வது திருமணமா!
பிக் பாஸ் அருணின் மனைவி என பெண் ஒருவர் புயலை கிளப்பி வருகிறார்.
பிக் பாஸ் அருன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் பிரபலமானவர் அருண் பிரசாத். தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.
ஆனால் அதில் எலிமினேட் ஆனார். அதற்கிடையில் விஜே மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனாவை காதலி என அறிமுகப்படுத்தினார். தற்போது இந்த வருடத்திற்குள் எங்களுடைய திருமணம் நடைபெறும் என்று அப்டேட் கொடுத்துள்ளனர்.
தீவிர ரசிகையா?
இந்நிலையில், Subhadra. arun என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் ஐந்து வருட காதல், பாரதியின் கண்ணம்மா, பெஸ்ட் ஹீரோ 2021 என்றும், மை ஹப்பி, சிங்கக்குட்டி, பட்டுக்குட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என் அர்ஜுன் என்று நடிகர் அருண் டேக் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அருண் பிரசாத்தின் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அதில் அத்தை என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன்.
அவர் சுபத்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். எனவே, இதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள் சுபத்ரா யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.