பிக் பாஸில் வெளியேறிய நந்தினி - 5 நாட்களுக்கு இவ்வளவு சம்பளமா?
நந்தினி பெற்ற சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நந்தினி
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன், பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. மொத்தம் 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.
அதன்படி இந்த சீசனில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், அரோரா சின்க்ளேர், எப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, வினோத், வியானா, பிரவீன், சுபிக்ஷா, அப்சரா CJ , நந்தினி, விக்ரம், கமருதீன், கலையரசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
எவ்வளவு சம்பளம்?
இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் நந்தினி. அவர் வீட்டின் மற்றவர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் மன அழுத்தத்தால் தாமாக முன்வந்து வெளியேறினார்.
மருத்துவ சிகிச்சை மற்றும் பிக்பாஸுடனான உரையாடலுக்குப் பிறகு, அவரால் போட்டியில் தொடர முடியவில்லை. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து நாட்கள் தங்கி இருந்த நந்தினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் நந்தினிக்கு ஒரு நாளுக்கான சம்பளமாக ரூபாய் 1,000 பேசப்பட்டிருந்தது. இந்தக் கணக்கீட்டின்படி, நந்தினிக்கு வழங்கப்பட்ட மொத்த சம்பளத் தொகை ரூபாய் 5,000 மட்டுமே என தகவல்கள் தெரிவிக்கின்றன.