4 மாதம் கர்ப்பமாக இருக்கும் அன்ஷிதா? ரயானிடம் ஓப்பனாக சொன்னதால் பிக்பாஸில் பரபரப்பு!
அன்ஷிதா மற்றும் ராயன் பேசிக்கொள்ளும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த ஏழு சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் ஒரு சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து விலகிய நிலையில் 8வது சீசனை
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 2 மாதங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். அவ்வப்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள்
அன்ஷிதா
காமெடியாக பேசிக்கொள்ளும் விஷயங்கள் கூட அதிகம் கவனம் பெற்றதாக மாறிவிடுகிறது. அப்படி தான் அன்ஷிதா மற்றும் ரயான் பேசிக்கொண்ட விஷயம் கவனம் பெற்றுள்ளது. அதாவது, அன்ஷிதா தனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் என வயிற்றை காட்டி ரயானிடம் கேட்டதற்கு,
அவர் கிண்டலாக வயிற்றில் என்ன பாப்பா இருக்கிறதா என கேட்கிறார். அதற்கு அன்ஷிதாவும் ஆமாம் மூன்று மாதம் என கூற, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து தானா என கேட்கிறார். பின்னர் நான்கு மாத பேபி எனக் அன்ஷிதா கிண்டலாக கூறுகிறார்.
அந்த காமெடியாக கூறப்பட்டது என்றாலும், இதுகுறித்த வீடியோவை வெளியிட்டு... அன்ஷிதா கர்ப்பமா? என்ன நடக்குது பிக்பாஸ் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.