சேனலே செய்த அவமானம்; அக்காவ இப்படி தான் பேசுவியா?உன்னால முடியாது - விளாசிய வினுஷா!
வினுஷா அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் 7
தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஐந்தாவது வாரம் கடந்துள்ளது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.
தொடர்ந்து, கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்றுள்ளனர். கடந்த வாரம் நாமினேஷனில் குறைந்த வாக்குகள் பெற்று வினுஷா தேவி வெளியேறி இருந்தார்.
கொந்தளித்த வினுஷா
இந்நிலையில், தற்போது அதுகுறித்து பேட்டியளித்துள்ள வினுஷா, இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது எனக்கு பிடிக்கவில்லை. மத்த சீசன்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த முறை பிக் பாஸ் வீட்டில் நடப்பது பிடிக்கவில்லை.
காரணம், உனக்கு இது வராது. உன்னால் செய்ய முடியாது. நீ இப்படித்தான் என்று ரொம்ப டாமினேட் செய்கிறார்கள். ஒரு சிலரின் கைத்தட்டலால் தான் பிரதீப் உள்ளே இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்.
அதேபோல் நிக்சன் என்னைப் பற்றி பாடி ஷேமிங் செய்தது எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. அவர் முதலில் என்னை அக்கா என்று தான் அழைத்தான். இப்படி ஒருவரை பாடி ஷேமிங் செய்வது தவறான ஒன்று. அவர் முதல் மூன்று இடம் பிடிப்பார் என்று நினைத்தேன்.
ஆனால், இப்படி ஒருவரை பாடி ஷேமிங் செய்வதன் மூலம் இவர் நீண்ட நாட்கள் இருக்க மாட்டார் என கொந்தளித்து பேசியுள்ளார்.
முன்னதாக தொலைக்காட்சியும் இவர் வெளியேறியபோது ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். அது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்த பின் நீக்கியது குறிப்பிடத்தக்கது.