Sunday, May 11, 2025

பிக் பாஸ் 7: இப்படி ஒரு முடிவு எடுத்த சேனல்? பதறும் போட்டியாளர்கள் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

Kamal Haasan Bigg Boss Pradeep Anthony
By Sumathi 2 years ago
Report

பிரதீப்க்கு ரெட் கொடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

Red Card

பெண்கள் பாதுகாப்பு என்ற வகையில் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள், மக்கள் என பலரும் பிரதீபிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

bigg-boss-7-pradeep-issue

இந்நிலையில், இந்த வீட்டில் பல்வேறு ஸ்டேட்மெண்ட் காட்டப்படும். அதை சொன்ன நபர் நான் ஏன் அதை சொன்னார்கள் என்பதை விளக்க வேண்டும் என்று படிக்கிறார். அதில் அனைவரும் ஒவ்வொருவராக வந்து தங்களுடைய ஸ்டேட்மெண்டுகளை கூறுகிறார்.

குடும்ப மானமே போகுது; ஐஷூவ வெளிய அனுப்புங்க - பிக்பாஸ் வீட்டிற்கே சென்ற பெற்றோர்!

குடும்ப மானமே போகுது; ஐஷூவ வெளிய அனுப்புங்க - பிக்பாஸ் வீட்டிற்கே சென்ற பெற்றோர்!

வெடிக்கும் சர்ச்சை

அப்போது நிக்சன் வினுஷாவை பற்றி உருவ கேலி செய்திருப்பதும் அனைவருக்கும் தெரிய வருகிறது. இப்படியான புரோமொ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. சேனல் தரப்பிலிருந்தே இதர போட்டியாளர்களின் தவறு சுட்டிக்காட்டப்படுவதாகவே பார்க்கப்படுகிறது.

nixon comment on vinusha body

இந்த முன்னெடுப்பும் மக்களின் குரலாகவே கருதப்படுகிறது. இருப்பினும், Bring back pradeep என்ற ஹேஸ் டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனையடுத்து பிரதீப் மீண்டும் நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பிருப்பதாக தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு மேல் நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று பிரதீப் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் பலர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கும் நிலையில், சேனல் தரப்பில் எதுவேனும் முடிவெடுப்பார்களா? அமைதி காப்பார்களா எனப் பார்ப்போம்.