Saturday, Jun 7, 2025

அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ.. அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர் - ஆத்திரத்தில் ரட்சிதா!

Kamal Haasan Bigg Boss Rachitha Mahalakshmi
By Sumathi 3 years ago
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல், ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கைகளை கண்டிக்க மாட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அட்ராசிட்டிஸ்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலிருந்து ராபர் மாஸ்டர் ரக்ஷிதாவை துரத்தி துரத்தி வரும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ.. அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர் - ஆத்திரத்தில் ரட்சிதா! | Bigboss Robert Master Atrocities Against Rachita

பலமுறை ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் ஆதங்கம்

இந்நிலையில், அண்ணா என்று அழைத்து பார்த்தும், நெற்றியில் குங்குமம் வைத்தும் பிரச்சனை வேண்டாம் என்கிற ரீதியிலும் விளையாடி வருகிறார் ரட்சிதா. ஆனால் தொடர்ந்து ராப்ர்ட் அவரை ஹராஸ் செய்யும் விதமாகவே நடந்துக் கொண்டு காமெடியாக செய்கிறேன் என மோசமாக நடந்து வருகிறார்.

அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ.. அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர் - ஆத்திரத்தில் ரட்சிதா! | Bigboss Robert Master Atrocities Against Rachita

இதில், ஏற்கனவே நடிப்புக்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி என்னை காதலிப்பது போல் நடி என எல்லை மீறும் ராபர்ட்டை கைகள் வெட்டப்படும் என ரட்சிதா எச்சரித்தும் விட்டார். இதனை பார்த்து வரும் ரசிகர்கள் இதையெல்லாம் கமல் கண்டிக்க மாட்டாரா என ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.