2024 தேர்தலின் மிக பெரிய பிரச்சனைகள் என்ன? ஆளும் கட்சிக்கு நெருக்கடிகள் எவை?
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது.
தேர்தல் - பிரச்சாரம்
நாட்டின் பொதுத்தேர்தல் நெருங்கியிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சார களத்தில் இறங்கியுள்ளன. 10 ஆண்டு பாஜகவின் ஆட்சி சாதனைகளை முன்வைக்கும் அக்கட்சி, ஆட்சியில் நடைபெற்ற தோல்விகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
பெரும்பாலும் எப்போதும் ஆளும் கட்சியாக இருப்பவை கூறுவது எங்கள் ஆட்சியில் வறுமை ஒழிவதாகும், இளைஞர்கள் - குடும்பத்தினர் நன்றாக இருக்கிறார்கள், நாட்டின் வளர்ச்சி பெரிதாக உள்ளது என்றே பெரிதாக இருக்கும்.
ஆனால், எதிர்கட்சிகள் வைக்கும் விவாதங்களை கேட்டால், அப்படி ஒன்றுமே இல்லை. நாட்டில் வறுமை அதிகரிப்பதாக, வேலையில்லா திண்டாட்டம், குடும்பங்கள் நிதிநிலையை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது என்றே பெரும்பாலும் குற்றம்சாட்டுவர்கள்.
இதனை கட்சி சார்பில்லாமல் பொதுத்தளத்தில் இருந்து பார்த்தால் தான் சில விஷயங்களை நாம் கண்டுகொள்ள முடியும். அப்படி தான் கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியிருக்கின்றது. சிஎஸ்டிஎஸ் - லோக்நிதி (CSDS-Lokniti ) என்ற அமைப்பு மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தைய (ப்ரீ போல் சர்வே) ஆய்வு தெரிவிக்கின்றது.
விலைவாசி
நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளதாக 71 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மேலும், 12 சதவீத பேர் மாநில அரசுகளே விலைவாசி உயர்வுக்கு காரணம் என்றும், மத்திய அரசே காரணம் என 26 சதவீதம் பேரும், இரு தரப்பும் என 56 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
76 சதவீத ஏழை மக்கள் விலைவாசி அதிகரித்துவிட்டதாக கூறிய நிலையில், 75 சதவீத முஸ்லிம் சமூகத்தினர் விலைவாசி உயர்வு தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வேலையில்லா திண்டாட்டம்
அதில் குறிப்பிடப்பட்டவை சிலவற்றை தற்போது காணலாம். ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 62 சதவீதம் பேர் வேலை கிடைப்பது சிரமமாக இருப்பதாகத் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில், கிராமப்புறத்தினர் 62 சதவீதம் பேரும், நகர்ப்புறத்தை சேர்ந்த 59 சதவீதம் பேரும் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்கிறார்கள்.
இதனை ஆண் பெண் விகிதாச்சாரத்தில் 65 சதவீத ஆண்களும், 59 சதவீத பெண்களும் வேலை கிடைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர். தெரிவித்துள்ளனர். இந்து, ஓபிசி, பட்டியலின சமூகங்களை சேர்ந்த 63 சதவீத பேர் வேலை கிடைப்பது கடினம் என்றே கூறியுள்ளனர். 67 சதவீத முஸ்லிம்கள் வேலைவாய்ப்பு கிடப்பது சிரமம் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.