ரெய்டு நடத்திய போலீசார்.. நள்ளிரவில் சிக்கிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் - அதிரடி கைது!

Bigg Boss India Maharashtra Mumbai
By Jiyath Mar 27, 2024 01:18 PM GMT
Report

ஹூக்கா பாரில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்தி பிக் பாஸ் டைட்டில் வின்னர் முனவர் ஃபரூக்கி உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்தனர்.

போலீசார் சோதனை 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லர் ஒன்று உள்ளது. இங்கு மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ரெய்டு நடத்திய போலீசார்.. நள்ளிரவில் சிக்கிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் - அதிரடி கைது! | Big Boss Title Winner Munawar Faruqui Arrested

இதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். எனினும், ஜாமீனில் வெளிவரக் கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றை கொடுத்து விட்டு பரூக்கி விடுவிக்கப்பட்டார்.

புஸ்ஸி ஆனந்த் போட்ட நாடகம்.. விஜய்யின் எதிர்காலம் பற்றிய பயம் - போட்டுடைத்த எஸ்ஏசி!

புஸ்ஸி ஆனந்த் போட்ட நாடகம்.. விஜய்யின் எதிர்காலம் பற்றிய பயம் - போட்டுடைத்த எஸ்ஏசி!

பிக்பாஸ் பிரபலம் கைது   

இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முனாவர் பரூக்கி, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார்.

ரெய்டு நடத்திய போலீசார்.. நள்ளிரவில் சிக்கிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் - அதிரடி கைது! | Big Boss Title Winner Munawar Faruqui Arrested

2021- ம் ஆண்டில், ஒரு நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்தார். இதனால் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடியாத்தக்கது.