புஸ்ஸி ஆனந்த் போட்ட நாடகம்.. விஜய்யின் எதிர்காலம் பற்றிய பயம் - போட்டுடைத்த எஸ்ஏசி!

Jiyath
in பிரபலங்கள்Report this article
விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், புஸ்ஸி ஆனந்துடனான விஜயின் அரசியல் பயணம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர்
நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கட்சிக்காக பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலியையும் அறிமுகம் செய்தார்.
அந்த கட்சியின் பொது செயலாளராக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். இவர் விஜயின் ரசிகர் மன்ற நற்பணிகள் பலவற்றை செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜயின் எல்லாமுமாக விளங்கி வருகிறார் புஸ்ஸி ஆனந்த்.
இந்த நிலையில் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், புஸ்ஸி ஆனந்துடனான விஜயின் அரசியல் பயணம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது "புஸ்ஸி ஆனந்த் ஆன்லைன் குரூப் ஒன்றை வைத்திருக்கிறார். அந்த குரூப்பில் விஜய்யும் இருக்காரு.
விஜய்யின் எதிர்காலம்..?
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு அரசியல்வாதி கூட இப்படி பண்ணமாட்டான். புஸ்ஸி ஆனந்த் மன்றத்துக்கு வந்தவுடன் வெளியில் உள்ள பெஞ்சின் மேல் அப்படியே சாய்ந்தது போல் படுத்துகொள்ளவார்.
ஒருவனை வைத்து அதனை போட்டோ எடுத்து, போட்டோவை அந்த ஆன்லைன் குரூப்பில் போடுவார். அந்த போட்டோவை 50 பேரை வைத்து ஷேர் பன்னவைத்தும், 100 பேரை வைத்து லைக்கும் பண்ணவைப்பார். அங்கு போடப்படும் நாடகம் உண்மையாக்கப்படுகிறது. விஜய் அந்த போட்டோவை பார்த்து, “நமக்காக இபப்டி உழைச்சுட்டு இப்படி கீழ படுத்து கிடக்குறாரே என்று, புஸ்ஸி ஆனந்தை அழைத்து அண்ணே நாளைல இருந்து நீங்க என் ரூம்ல இருங்கண்ணே” என்று சொல்லுகிறார்.
இப்படி தான் நடக்கிறது. இப்படிப்பட்ட நபருடன் இருந்தாரென்றால் நாளை விஜய்யின் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு தந்தையாக எனக்கு வருமல்லவா.. அந்த பயம் தான் எனக்கு” என்று பேசியுள்ளார்.