இதை செய்தால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவாது - பைடன் எச்சரிக்கை
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஈரான் தாக்குதல்
ஈரான் ஆதரவு தலைவர்களை கொன்றதற்காக கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
ஆனால் இந்த ஏவுகணைகளை அமெரிக்காவின் உதவியுடன் வழிமறித்து தாக்கி தாக்குதலை முறியடித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஈரானின் எண்ணெய் ஆலைகள், அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம் வகுத்து வருகிறது.
அமெரிக்கா எச்சரிக்கை
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி தளத்தை இஸ்ரேல் தாக்கினால், ஈரானின் பதில் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா உதவாது என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. இதனிடையே இன்று அமெரிக்கா செல்ல இருந்த இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட்டின் தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் இன்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடனிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் அமெரிக்காவின் நிபந்தனைகள், இஸ்ரேலின் தாக்குதல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கக்கூடாது என பிரான்ஸ் பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இல்லாமலே போரில் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.