Tuesday, Jul 8, 2025

மறைந்த பவதாரிணியின் கணவர் யார் தெரியுமா - தற்போது என்ன செய்கிறார்?

Tamil Cinema Ilayaraaja
By Sumathi a year ago
Report

மறைந்த பாடகி பவதாரிணியின் கணவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பவதாரிணி மறைவு

இசைஞானி இளையராஜா என்றால் தெரியாதவர் யாரும் இல்லை எனும் அளவிற்கு பிரபலம். இவரது மகள் பவதாரிணி(47). 30 படங்களுக்கு மேல் பாடல் பாடியுள்ளார். மேலும், 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

bhavatharini-husband

இந்நிலையில், புற்றுநோய் பாதிப்புக் காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பவதாரிணி இறந்துடுவாங்கனு முன்னாடியே தெரியும் -இளையராஜா மருமகள் பகீர்!

பவதாரிணி இறந்துடுவாங்கனு முன்னாடியே தெரியும் -இளையராஜா மருமகள் பகீர்!

கணவர் குறித்த தகவல்

தற்போது இளையராஜாவின் சொந்த ஊர் தேனியில் பவதாரிணியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்து வருகின்றனர். இதற்கிடையில், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பிரபல பத்திரிகையாளர் ராமசந்திரனின் மகன் ஆர். சபரிராஜ் உடன் பவதாரிணியின் திருமணம் கடந்த 2005ல் நடைபெற்றது.

மறைந்த பவதாரிணியின் கணவர் யார் தெரியுமா - தற்போது என்ன செய்கிறார்? | Bhavatharini Husband And Marriage Details

சென்னையில் சினிமா பிரபலங்கள் பங்கேற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடைசி வரை தனது மனைவியை காப்பாற்ற வேண்டும் என கணவர் சபரி ராஜனும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். பவதாரிணிக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

You May Like This Video