தாய் மனைவியை அடக்கம் செய்த அதே இடம்...மகளையும் நல்லடக்கம் செய்யும் இளையராஜா..!
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணியின் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
பவதாரிணி
இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான பவதாரணி, தொடர்ந்து எண்ணற்ற ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
குறிப்பாக விஜய்யின் "பிரண்ட்ஸ்" படத்தில் "தென்றல் வரும்",தாமிரபரணி படத்தில் "தாலியே தேவையில்லை", அனேகன் படத்தில் "ஆத்தாடி ஆத்தாடி", மாநாடு படத்தில் "மெஹருஃஜெயலா" போன்ற பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு பாரதி படத்தில் "மயில் போல பொண்ணு ஒன்று" பாடலை பாடியதற்காக தேசிய விருதையும் வென்றுள்ளார். புற்றுநோய் பாதிக்கப்பட்டு, இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 25-ஆம் தேதி மாலை மரணமடைந்தார்.
இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பவதாரிணியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் முல்லைப் பெரியாற்றங்கரையில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதே இடத்தில் தான் இளையராஜாவின் தாயார் சின்னத்தாயி, மனைவி ஜீவா ஆகியோரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.