நான்தான் ஹேமா அம்மா... ஒருவழியா உண்மைய சொன்ன கண்ணம்மா? ஷாக்கில் பாரதி!

Viral Video Serials
By Sumathi Aug 03, 2022 12:40 PM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா பற்றிய உண்மை பாரதிக்கு தெரிய போகிறது. இந்த பரபரப்பான ட்விஸ்ட் குறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் 8வது இடத்தில் உள்ளது.

நான்தான் ஹேமா அம்மா... ஒருவழியா உண்மைய சொன்ன கண்ணம்மா? ஷாக்கில் பாரதி! | Bharathi Kannamma Serial Twists In This Week

ரசிகர்கள் எதிர்பார்ப்பையடுத்து, சீரியலில் முக்கியமான ட்விஸ்டை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். இத்தனை நாளாக ஹேமாவுக்கு தனது அம்மா யார்? என்ற சந்தேகம் வந்ததே இல்லை.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு 

ஆனால் சமையல் அம்மாவின் பெயர் கண்ணம்மா என்று தெரிந்த நாளிலிருந்து ஹேமாவுக்கு தனது அம்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணம் வந்து விட்டது. இந்த நிலையில் தனது பிறந்த நாள் பரிசாக அம்மாவின் ஃபோட்டோவை கேட்கிறார் ஹேமா.

நான்தான் ஹேமா அம்மா... ஒருவழியா உண்மைய சொன்ன கண்ணம்மா? ஷாக்கில் பாரதி! | Bharathi Kannamma Serial Twists In This Week

பாரதியும் அதற்கு சம்மதிக்க, யாரை அம்மாவாக காட்ட போகிறார் என தெரிந்து கொள்ள குடும்பத்தில் இருப்பவர்கள் ஆர்வமாக இருந்தனர். அதே நேரம் கண்ணம்மா, அந்த இடத்தில் வேற பெண்ணின் ஃபோட்டோ இருந்தால் கொலையே நடக்கும் என ஏற்கெனவே கூறி இருந்தார்.

அதிர்ச்சியில் பாரதி

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரசிகர்களுக்கு பல ஸ்வாரஸ்யங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. பாரதி ஃபோட்டோவுடன் வருகிறார். ஹேமாவும் ஆவலுடன் அதை பார்க்கிறார். அதில் இருப்பது பாரதி கல்லூரியில் காதலித்த ஹேமாவின் முகம். கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை.

அதே நேரம் கோபமும் வருகிறது. இந்த நேரத்தில் தான் புரோமோவில் காட்டிய அனைத்து காட்சிகளும் அரங்கேறவுள்ளது. ஹேமா பற்றிய உண்மையை கண்ணம்மா போட்டுடைக்கிறார். தனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்பதையும் சொல்லி விடுகிறார்.

கண்ணம்மா சொல்வது அனைத்தும் உண்மை என்கிறார் சவுந்தர்யா. அதிர்ச்சியில் பாரதி... இப்படியாக காட்டப்பட்ட புரோமோவை கண்ட ரசிகர்கள் எபிசோடிற்காக மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.