விரைவில் அறிமுகமாகும் பாரத் அரிசி; மலிவு விலையில்.. அரசு அறிவிப்பு!

Narendra Modi India
By Sumathi Dec 28, 2023 05:21 AM GMT
Report

மலிவு விலையில் ‘பாரத் அரிசி’ விற்பனைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பணவீக்கம்

நாட்டில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

bharat-rice

அந்த வகையில், உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில் அரிசியின் விலையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாரத் என்ற பிராண்ட் பெயரில் அரிசியை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டும் தான் - அமெரிக்காவில் தொடரும் தட்டுப்பாடு..!

ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டும் தான் - அமெரிக்காவில் தொடரும் தட்டுப்பாடு..!

பாரத் அரிசி

ஏற்கெனவே மத்திய அரசு பாரத் பிராண்டின் கீழ் கோதுமை மாவு மற்றும் பருப்பு ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. தொடர்ந்து, அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு

விரைவில் அறிமுகமாகும் பாரத் அரிசி; மலிவு விலையில்.. அரசு அறிவிப்பு! | Bharat Rice For Rs 25 Central Government Plan

இந்தியா லிமிடெட் (NCCF), கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், பாசுமதி அல்லாத அரிசி வகை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம் ஒட்டுமொத்த நுகர்வோர் நிதி நிலையைப் பாதிக்கும் காரணத்தால், 2024ம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்பு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.