கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் பாதுகாப்பானதா? பாரத் பயோடெக் விளக்கம்!

COVID-19 COVID-19 Vaccine India
By Sumathi May 03, 2024 07:00 AM GMT
Report

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் விளக்கமளித்துள்ளது.

கோவாக்சின்

2019இல் பரவிய கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளையும் உலுக்கி எடுத்தது. அதிலிருந்து மீளவே வருடங்கள் ஆனது.

covaxin

அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வர கொரோனா தடுப்பூசி காரணமாக அமைந்தது. அதில், அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக வழக்கு தொடரப்பட்டது.

கோவிஷீல்ட்; அரிய பக்க விளைவுகள் ஏற்படும் - தயாரித்த நிறுவனமே விளக்கம்!

கோவிஷீல்ட்; அரிய பக்க விளைவுகள் ஏற்படும் - தயாரித்த நிறுவனமே விளக்கம்!

 பாரத் பயோடெக் விளக்கம்

அதனப்டி, கோவிஷீல்டு மருந்தை செலுத்தியவர்களுக்கு பக்கவிளைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஸ்ட்ரா ஜென்கா நிறுவனமும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இந்த செய்தி பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் உடன் இணைந்து தயாரித்த மற்றொரு தடுப்பூசி தான் கோவாக்சின்.

கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் பாதுகாப்பானதா? பாரத் பயோடெக் விளக்கம்! | Bharat Biotech Corona Vaccine Covaxin Is Safe

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவாக்சின் மருந்து ரத்தம் உறைதல் உள்ளிட்ட எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. கோவாக்சின் மருந்தின் உரிமம் பெறுவதற்காக 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை சோதிக்கப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே அனைத்துவிதமான தடுப்பூசிகளையும் தயாரித்து வருவதாக பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.