பானுப்பிரியாவிற்காக மாடியிலிருந்து குதித்த கார்த்திக் - போட்டுடைத்த பிரபலம்!
நடிகர் கார்த்திக் செய்த சில ஷாக் செயல்கள் குறித்து தமிழா தமிழா பாண்டியன் தகவல் பகிர்ந்துள்ளார்.
சக்கரவர்த்தி
நடிகை பானுப்பிரியா பல மொழிகளில் சுமார் 111-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக், பானுப்பிரியாவின் காமினேஷன் பக்காவாக இருக்கும்.
இவர்கள் இருவரும் சேர்ந்து பாடும் பறவை, கோபுர வாசலிலே, சக்கரவர்த்தி, அமரன் என பல படத்தில் நடித்துள்ளனர். இருவரது கெமிஸ்ட்ரி குறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், சக்கரவர்த்தி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது,
கார்த்திக் செய்த செயல்
பானுப்பிரியா கார்த்திக்கின் கெஸ்ட்ஹவுசுக்கு சென்றால், இருவரும் படப்பிடிப்புக்கு ஒத்துழைக்காததால், கடைசியில் கெஸ்ட்ஹவுசே ஷூட்டிங் ஸ்பார்ட்டாக மாற்றப்பட்டு படம் எடுக்கப்பட்டு வந்தது. இதுமட்டுமில்லாமல்,பானுப்பிரியாவையும் ஏமாற்றி தயாரிப்பாளரையும் ஏமாற்றி, பெரிய கட்டுடன் வீட்டில் படுத்து இருக்கிறார் நடிகர் கார்த்திக்.
காலில் இருந்த கட்டைப்பார்த்து பயந்து போன, பானுப்பிரியா என்ன ஆச்சு என்று கேட்க, அவர் வீட்டில் வழுக்கி விழுந்ததாக சொல்லி இருக்கிறார். வழுக்கி விழுந்தா இவ்வளவு பெரிய காயம் வராதே,மாடியில் இருந்து குதித்தீர்களா என்று கேட்க இல்லை என்று சொல்ல, சந்தேகம் அடைந்த பானுப்பிரியா கட்டைப்பிரிந்து பார்த்தால், காயமே இல்லை அது பானுப்பிரியாவை ஏமாற்ற பார்த்த வேலை.
மேலும், நீ தயாரிப்பாளரிடம் மொத்த பணத்தையும் வாங்கிவிடு என்று பானுப்பிரியாவை ஏற்றிவிட்டுள்ளார். ஆகையால் எனக்கு முழு சம்பளத்தை கொடுங்கள் என்று முடிவாக பானுப்பிரியா சொல்லியுள்ளார்.
கார்த்திக்கின் பேச்சை கேட்டுக்கொண்டு இப்படி பானுப்பிரியா செய்ததால், மற்ற தயாரிப்பாளர்கள் அவரை புக் செய்ய யோசித்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.